SRH க்கு எதிரான குவாலிஃபயர் 2 போட்டியில் மிக மோசமான பேட்டிங் காரணமாக RR அணி தோல்வியை தழுவியது. இந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (42), ஜூரேல் (56) தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் தலா 10 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். 7 ஓவரில் 56/1 என்ற நிலையில் இருந்த RR, கடைசி ஐந்து ஓவர்களில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதுதான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.