இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் தேர்வு இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
ஏபி டி வில்லியர்ஸ்:
முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், பயிற்சியாளர் பதவி குறித்து தான் தீவிரமாக யோசிக்கவில்லை என்றாலும், இப்பணியில் ஈடுபட மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்.

“நான் கற்றுக்கொண்ட பாடங்கள், எனது 40 வயதில் வந்த முதிர்மை, பின்னோக்கி என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் பார்க்கும்போது பல விஷயங்கள் மிகத் தெளிவாகத் தெரிகிறது. எனவே அந்த அனுபவங்கள் சில இளம் வீரர்களுக்கும், சில மூத்த வீரர்களுக்கும் கூட மதிப்புமிக்கதாக இருக்கும்” என்று டி வில்லியர்ஸ் கூறினார். எது எப்படியோ இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும்.