RR-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் Qualifier 2 போட்டியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, RR அணி ப்ளே-ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

லீக் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த RR அணி, கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட RR அணி, இம்முறையும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.