கோயம்புத்தூரில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது கோவை அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதாவது இனிப்புக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும் காரத்துக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும் கூறினார். அதோடு பன் மற்றும் பிரட்டுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதில்லை எனவும் ஆனால் அதற்குள் வைக்கப்படும் ஜாமுக்கு மட்டும் 18 சதவீதம் வரி விதிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் பன்னை மற்றும் தாருங்கள் ஜாமை நாங்களே வைத்துக் கொள்கிறோம் என்று கூறுகிறார்கள்.
ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக ஜிஎஸ்டி வரி விதிப்பதால் கணினியே குழம்பிவிடுகிறது. எங்களால் கடை நடத்த முடியவில்லை மேடம். ஜிஎஸ்டி வரிகளை பரிசீலனை செய்து பார்க்க வேண்டும் என்று கூறினார். அவருடைய பேச்சு மிகவும் பைரான நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் தான் பேசியதற்கு நிர்மலா சீதாராமனிடம் தற்போது அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதாவது தான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் கிடையாது. நேற்று பேசியது மிகவும் சர்ச்சையாக மாறிவிட்டது. தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கைகூப்பி மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் நிர்மலா சீதாராமன் தங்கி இருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று நேரடியாக மன்னிப்பு கேட்டுள்ளார். புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் கோவையில் தொழில் துறை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில் ஜிஎஸ்டி குறித்து துணிச்சலாக பேசிய அவர் திடீரென இன்று மன்னிப்பு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.