தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 12600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெங்கு பாதிப்பு மாநிலம் முழுவதும் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்களுடைய வீடுகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதோடு தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேலும் யாருக்கேனும் காய்ச்சல் உள்ளிட்ட டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.