காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக இருக்கிறது. இங்குள்ள வெண்ணெய் உருண்டை, பாறை கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட புராண சின்னங்களை பார்ப்பதற்காக வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிய மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி சீன அதிபர் சந்திப்பு, ஜி-20 மாநாடு, செஸ் ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெற்றதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. மாமல்லபுரம் பகுதிகளில் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகளில் மாடுகள் உலா வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளும் அவதி அடைகின்றனர்.

ஏற்கனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். தற்போது அந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சாலைகளில் சுற்றி திரிகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.