விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அருகே அப்பம்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் செங்குட்டவன் என்ற கல ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவர் தற்போது தவ்வை என்ற பழமையான சிற்பத்தை கண்டுபிடித்துள்ளார். இது 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அவர் கூறியுள்ளார்.
இச்சிற்பம் மூத்ததேவி என்றும் வடமொழியில் ஜேஷ்டா என அழைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அந்த கோவிலில் உள்ள மேகலை அணிகலனுக்கு அழகு சேர்க்கும் வகையில் கரண்ட மகுடம், குழையும் காதணிகள் மற்றும் கழுத்து, கைகள் கால்களில் என அணிகலனுக்கு அழகு சேர்க்கும் வகையில் அவைகள் காணப்படுகின்றன. இரண்டு கால்கள் தொங்கவிட்டு திண்டின் மீது அமர்ந்த நிலையில் வலது கரம் அபய முத்திரையுடன் இடது கரம் செல்வ குடத்தின் மீது வைத்ததுபோல் தவ்வை காட்சியளிக்கின்றது என்றார்.
மேலும் இச்சிற்ப்பம் பல்லவர் காலத்தைச் சேர்ந்த 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அவர் கூறியுள்ளார்.