
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது நடந்த சம்பவம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவீட்டாரும் நிச்சயதார்த்தத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். ஆனால் இறுதியில் மாப்பிள்ளை வீட்டார் நிச்சயதார்த்தத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு சண்டையாக மாறிய நிலையில், ஆக்கிரமடைந்த பெண் வீட்டார் மாப்பிள்ளையின் சகோதரரை பிடித்து வைத்து அவரது மீசையை வெட்ட ஆரம்பித்தனர். இதனை கடன் உண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் மணமகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நிச்சயதார்த்தம் நின்றதில் எங்களது தவறு எதுவும் இல்லை. பெண் பார்க்கும் போது கொடுத்த புகைப்படமும், நிச்சயதார்த்தத்தில் இருந்த பெண்ணும் வேறு வேறு ஆகும். இந்த ஏமாற்றத்தை எங்களால் தாங்க முடியவில்லை. இதன் காரணமாக சிறிது அவகாசம் தேவை என்று கூறினோம். எங்களுக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதன் பிறகு மாப்பிள்ளை வீட்டார் காவல்துறையினரிடம் பாதுகாப்பு கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, இருதரப்பினரிடமும் முறையான புகார் எதுவும் வரவில்லை. தற்போது காவல்துறையினர் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.