சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்கர் மாவட்டத்தில் உள்ள சார்மர் பீட் பகுதியில், ஒரு யானைக் குட்டி ஆழமான கிணற்றில் விழுந்தது. அந்தக் குட்டி யானை இரவில் தனது யானை கூட்டத்துடன் சால் மலைத்தொடரிலிருந்து வந்தபோது, தவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
மறுநாள் காலை அருகிலுள்ள கிராம மக்கள் மஹுவா பழங்களை சேகரிக்கச் சென்ற போது, யானையின் குரலைக் கேட்டனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரத்துடன் விரைந்து வந்து மீட்புப் பணியைத் தொடங்கினர்.
वीडियो छत्तीसगढ़ के रायगढ़ जिले से सामने आया है. यहां रायगढ़ वन मंडल के चारमार के जंगलों में एक हाथी का बच्चा कुएं में गिर गया था.
गांव के लोगों ने जेसीबी की मदद से उसके लिए रेस्क्यू ऑपरेशन चलाया. जब हाथी गहरे कुएं से बाहर निकल पाया तो JCB ड्राइवर को ‘धन्यवाद’ कहा, सूंड़ उठाकर… pic.twitter.com/ccaBtWpxeQ
— The Lallantop (@TheLallantop) June 3, 2025
பின்னர் கிணற்றின் ஒரு பக்கத்தில் மண்ணை ஊற்றி வெளியேறும் பாதை உருவாக்கப்பட்டது. அப்போது யானைக் குட்டி தன்னுடைய தும்பிக்கையை ஆட்டிக்கொண்டு வெளியேற முயன்றது. சுமார் 1 மணி நேர கடின முயற்சிக்குப் பிறகு, யானைக் குட்டி வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட யானை ஜேசிபி வண்டியின் வாளியைப் பிடித்து நன்றி கூற முயன்றதும், பின் காட்டை நோக்கி ஓடியதும் அங்கு நின்ற இருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அந்த யானையின் வயது சுமார் 1 வருடம் ஆகும். தற்போது அது பாதுகாப்பாக மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டுள்ளது. மேலும், அதன் கூட்டத்துடன் மீண்டும் இணைவதை உறுதி செய்ய வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம், காட்டுவிலங்குகளுக்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் உணர்த்துகிறது.
