சென்னையில் ஆபரண தங்க விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை ஏற்றமும் இறக்கமும் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 42,240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் குறைந்து 5280 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 71.70 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 71 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.