பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா தற்போது சன் டிவியில் இனியா என்ற தொடரில் நடிக்கிறார். இவர் தற்போது மருத்துவமனையில் காலில் கட்டுடன் இருக்கும் வீடியோவை நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து ஆல்யா கூறும் போது, எதிர்பாராத விபத்தில் கால் முறிவு ஏற்பட்டதால் என்னால் நடக்க முடியவில்லை. ஆனாலும் சிறிது சிறிதாக குணமாகிறது. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் ஆல்யாவுக்கு 2-வது குழந்தை பிறந்தது. அதன் பிறகு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்த ஆல்யா இப்போதுதான் சீரியலில் கம் பேக் கொடுத்தார். அதற்குள் அவரது காலில் அடிபட்டது. இந்நிலையில் நேற்று காலை ஆல்யா தான் படப்பிடிப்புக்கு திரும்பி விட்டதாக மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார். இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் கவனமாக இருக்குமாறு ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.