இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் அவரது மனைவியுமான நடிகை அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ஆம் தேதி வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. விராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் தங்களது மகள் வாமிகாவின் 2-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு “எனது இதய துடிப்பிற்கு 2 வயது” குறிப்பிட்டுள்ளார். மேலும் வாமிகா விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்க ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.