முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனும் ஆன மு.க.அழகிரியின் பிறந்தநாள் வருகிற ஜனவரி மாதம் 30-ஆம் தேதி வருகிறது. இந்த பிறந்தநாளை முன்னிட்டு மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை நகர் முழுவதும் பல்வேறு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டரில் மு.க.அழகிரி மற்றும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி போன்றோரின் படங்களோடு “பழையன கழிதலும், புதியன புகுதலும்! கலைஞரின் பொன்னர் சங்கரே! கண்கள் பணிக்க வேண்டும், இதயம் இனிக்க வேண்டும், நாடாளுமன்றத்தை 40ஆம் கைப்பற்ற வேண்டும்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. அதோடு நாடாளுமன்றத்தின் முன் பாதுகாவலர்களோடு மு.க.அழகிரி நடந்து வருவது போன்று போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.