இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் தங்கள் பைக் நம்பர் பிளேட்களை வித்தியாசமாக அமைத்துக் கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.   பலர் தங்களுடைய கார்கள் மற்றும் பைக்குகளில் விதவிதமான நம்பர் பிளேட்களை பயன்படுத்துவதை வழக்கமாகி வருகிறார்கள். நம்பர் பிளேட்டுகளில் எண்களை சாதாரணமாக எழுதாமல் விசித்திரமான முறையில் எழுதுவது, அடையாளம் காண முடியாத அளவிற்கு எண்களை எழுதுவது என்று பலர் நம்பர் பிளேட்களில் டிசைன்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார், விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதித்து, அவற்றை உடைத்து மாற்ற அறிவுறுத்துகின்றனர். எனவே பைக் வைத்திருப்போர் தங்கள் நம்பர் பிளேட்டில் எந்த கூடுதல் டிசைனும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.