கரூர் மாவட்டம் மாயனூர் காவிரியாற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் இறந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூபாய்.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது, கரூரில் விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற பள்ளி மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி பலியாகியனர்.

இந்நிலையில் இவர்களது பெற்றோர் கரூர் செல்வதற்கு முன்பே உடற்கூறாய்வு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து புதுக்கோட்டை அருகே மாணவிகளின் சொந்த ஊரான பிலிபட்டியில் கிராம மக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.