ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து 49 சுயேட்சைகள், 25 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தேசிய மாநில கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் அதிமுகவை  நேரடியாக எதிர்க்க திமுகவுக்கு தைரியம் இல்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சி தான் பொற்கால ஆட்சியாக இருந்தது. ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை கூட்டிவந்து ஆடு, மாடு போல் அடைத்து வைத்துள்ளனர் என்று சாடினார்