தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் 19-ஆம் தேதி லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் விஜயின் திரைப்படத்தில் நடிக்க உலக அழகி ஐஸ்வர்யா ராய் மறுத்ததாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் விஜய் மற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் தமிழன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் முதலில் நடிகை ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் ஐஸ்வர்யா ராய் விஜய் தன்னைவிட சிறிய வயது பையன் என்பதால் அவருடன் நான் ஜோடியாக நடித்தால் செட்டாகாது என கூறி தமிழன் பட வாய்ப்பை நிராகரித்து விட்டார். அதோடு அஜித் மாதிரியான நடிகர்கள் இருந்தால் சொல்லுங்கள் நான் நடிக்கிறேன். விஜய் போன்ற சின்ன பையனுடன் நான் ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்காது என ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் விஜயிடம் கூற டென்ஷனான விஜய் உலக அழகி பட்டம் என்ற ஒருவரை தான் தமிழன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். இதனையடுத்து தான் உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவை தமிழன் திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர். மேலும் இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.