அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், குழந்தைகள் சாட்பாட்கள் பயன்படுத்தும் போது, அவர்கள் தற்கொலை எண்ணம் கொண்டிருந்தால் அதை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கட்டாயமாகும் புதிய சட்டத்திற்கு கவர்னர் கேவின் நியூசம் கையெழுத்திட்டுள்ளார்.

Senate Bill 243 என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம், சாட்பாட்கள் மூலம் தீங்குகள் ஏற்படுவதை தடுக்கும் பாதுகாப்புகளை நிறுவ கட்டாயமாக்குகிறது.

இந்தச் சட்டம் மூலம், OpenAI’s ChatGPT போன்ற சாட்பாட்கள் வழங்கும் நிறுவனங்கள், மனநலம் சிக்கல்களில் உதவக்கூடிய தகவல்களை வழங்க, குழந்தைகள் பயன்படுத்தும் பொழுது வேறு எச்சரிக்கைகளை வழங்க வேண்டும். மேலும், இவை பொய்யான பதில்கள் என்பதை நினைவூட்டும் விழிப்புணர்வு செய்திகள் அடிக்கடி காட்ட வேண்டும் என்பதும் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையே, மற்றொரு முக்கியமான மசோதாவான AB 1064, குழந்தைகள் பாதுகாப்பை அதிகம் முன்னிறுத்தும் விதமாக இருந்தது. ஆனால், அதை கையெழுத்திடாமல் நியூசம் முடிவெடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. AB 1064 மசோதா, சாட்பாட்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு இல்லையென்றால் மட்டுமே அவற்றை இயக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கடுமையான வரம்புகளை விதித்திருந்தது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும், சட்டம் மாறியபின் சிலர் ஆதரிக்கத் தொடங்கினர். Tech Oversight மற்றும் Common Sense Media போன்ற குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் SB 243 சட்டத்தில் அதிக சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக விமர்சித்து, AB 1064-க்கு ஆதரவு தெரிவித்தன. “நியமனங்கள் இல்லாத தொழில்நுட்பங்கள் குழந்தைகளுக்கு பேரழிவாக மாறக்கூடும்,” எனக் கடுமையாகக் கூறியுள்ளன.