கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரியுடன் அரை நிர்வாணமாக படகில் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பராவில் இவர்கள் இருவரும் சுற்றுலா சென்று, படகில் சவாரி செய்தபோது இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

கேத்தி பெர்ரி கருப்பு நிற பிகினி அணிந்திருக்க, ட்ரூடோவின் கையில் இருந்த பச்சை குத்தலை வைத்து அவரை அடையாளம் கண்டதாக ஒரு சாட்சி தெரிவித்துள்ளார். இவர்கள் கடந்த ஜூலை முதல் டேட்டிங் செய்து வருவதாகவும், மான்ட்ரீல் நகரில் நடந்த இரவு விருந்தில் ஒன்றாக கலந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேத்தி பெர்ரி, நடிகர் ஆர்லேண்டோ ப்ளூமுடனான ஏழு ஆண்டு உறவு கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு வந்த பிறகு, தற்போது ட்ரூடோவுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. கேத்தி மற்றும் ஆர்லேண்டோவுக்கு 2020ஆம் ஆண்டு டெய்சி டவ் என்ற மகள் பிறந்துள்ளார்,

மேலும் அவர்கள் இருவரும் தங்கள் மகளை ஒன்றாக வளர்க்க முடிவு செய்துள்ளனர். தற்போது, கேத்தி மற்றும் ட்ரூடோவின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன, குறிப்பாக “Katy Perry Daily Brasil” என்ற கணக்கில் பதிவேற்றப்பட்ட புகைப்படம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.