சமூக வலைதளத்தில் தற்போது ஒரு வீடியோ மிகவும் வைரல் ஆகி வருகிறது. அதில் ஒரு நபர் மெதுவாக நடக்கும் போது, அவரது உடல் இடுப்பில் இருந்து பிரிந்து இருப்பது போல் தெரிகிறது. உடலின் மேல் பகுதி தனியாக, கீழ் பகுதி தனியாக இருப்பதுபோல் காட்சி அளிக்கிறது. அவர் ஒரு கையை தொங்க விட்டு, மற்றொரு கையால் தொடையைப் பிடித்து நடக்கிறார். இது பார்க்கும்போது அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது.
इस भाई ने तो 'A I' को भी पीछे छोड़ दिया
भाई की गजब टेक्नोलॉजी ..लाइक तो बनता है
अमेरिका क्या कहता था 😅😅 pic.twitter.com/1956tWLTOx
— Amrendra Bahubali 🇮🇳 (@TheBahubali_IND) September 28, 2025
உண்மையில் இது ஒரு லப்ட் டிரிக். அந்த நபர் கால் போன்ற ஒரு அமைப்பில் தனது கால்களைப் பொருத்தி, குனிந்து நடக்கிறார். பின்னர் அந்த உடலைப் பிடிப்பது போல் பிடித்து, உடல் இரண்டாகப் பிரிந்ததுபோல் காட்டுகிறார். இந்த வீடியோவை X (எக்ஸ்) தளத்தில் @TheBahubali_IND என்ற கணக்கு பதிவிட்டுள்ளது. கேப்ஷனில், இந்த காணொளியை இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பார்வையாளர்கள் கருத்துகளில், “இது AI-ஐயும் தோற்கடித்துவிட்டது”, “சூப்பர் திறமை”, “சகோதரனின் கலை பாருங்கள்”, “என்ன கிரியேட்டிவிட்டி” என்று பாராட்டி வருகின்றனர்.
