தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். துணிவு திரைப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திலிருந்து  ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பபை பெற்றது. இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ்ஆகிறது .

இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களின்  ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இந்த ரிலீஸ் தேதியை சில தியேட்டர் உரிமையாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

அதன்படி துணிவு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதியும், வாரிசு திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதியும் ரிலீஸ் ஆகிறது. இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் மல்டி ஸ்கிரீன் திரையரங்குகளில் பிரச்சனை வரக்கூடும் என்பதால், ஒரு நாள் முன் பின்னாக வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.