வாரிசு திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே சுவாரசியமான அப்டேட்டுகளை படக்குழு வழங்கி வருவதால் விஜய் ரசிகர்களும் தொடர்ச்சியாக தளபதி விஜய், வாரிசு போன்ற ஹேஷ்டாக்குகளை சமூக வலைதளங்களில் ட்ரெண்டு செய்து வருகின்றனர். ஆடியோ லான்ச் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட மறுநாள் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

படத்தின் சென்சார் பணிகள் முழுமை பெற வேண்டுமென்பதே இந்த இரண்டு நாட்கள் தாமதமானதுக்கு காரணமாக பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் படக்குழு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.