திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாமரைபாடியில் 120 ஏக்கர் பரப்பளவு உடைய மந்தை பெரியகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் தேங்கும் தண்ணீரால் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் பயன்பெறும். கடந்த 17 ஆண்டுகளாக வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாததால் தண்ணீர் குளத்தில் நிரம்பாமல் இருந்தது.

இதனால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சக்கம்பட்டி வரத்து வாய்க்காலை தூர்வாரி கடந்த ஒரு மாதமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதன் பலனாக தற்போது தாமரைப்பாடி பெரிய மந்தைகுளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு குளம் நிரம்பியதால் கிராம மக்கள் மகிழ்ச்சியில் பூஜைகள் செய்து, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.