அதிமுகவை ஒருங்கிணைப்பதில் அருகில் நெருங்கிவிட்டோம் என சசிகலா தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன். தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவிற்கு நல்லதல்ல, அதைத்தான் சொல்ல முடியும் எனவும் கூறியுள்ளார். இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு இணைய வேண்டும் என பாஜக வலியுறுத்திய நிலையில், சசிகலா இவ்வாறு கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து பேனா சின்னம் தொடர்பாக பதில் அளித்த சசிகலா, பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு மட்டும் ரூபாய்.87 கோடி அரசுக்கு எங்கிருந்து வருகிறது..? பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு பதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.