50 ஆண்டுகளை கடந்த மாபெரும் இயக்கமான அதிமுக யாருக்காகவும் எப்போதும் காத்திருக்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இரட்டை இலை சின்னம் தொடர்பாக நாங்கள் எந்த கோரிக்கையையும், தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கவில்லை. பாஜக உட்பட யாருக்காகவும் அதிமுக காத்திருக்காது.
தேர்தலை நாங்கள் உறுதியாக சந்திக்க உள்ளோம். இடைத் தேர்தலை அறிவிக்க 6 மாதம் அவகாசம் இருந்த போதிலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அவசர அவசரமாக அறிவித்தது ஏன்?. இடைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்து உள்ளது என அவர் கூறினார்.