சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (சனிக்கிழமை) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பல நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டது. அதனை ஈடு செய்யக்கூடிய வகையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதற்காக நாளை தினம் சனிக்கிழமை (04.02.2023) பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என அனைத்து வகையான பள்ளிகளும் நாளைய தினம் சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சனிக்கிழமை நாட்களில் பாட வேலைகள் நடைபெறுவதாக  இருந்தால் ஒவ்வொரு சனிக்கிழமைக்கும் ஒவ்வொரு பாடவேளைகள் அறிவிக்கப்படும்..

அதன்படி சென்னையில் நாளைய தினம் பள்ளிகள் புதன்கிழமை பாடவேலையை பின்பற்றி முழு பணி நாளாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் அதற்கு தேவையான உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், அனைத்து மாணவர்களும் நாளை தினம் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நெருங்கி வரக்கூடிய சூழ்நிலையில் மாணவர்களை பொது தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் எனவும், இந்த பாட வேலையை பயன்படுத்தி மாணவர்களுக்கு இருக்கக்கூடிய அந்த விடுபட்ட பாடங்கள் போன்றவற்றை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்த நாட்களில் விடுமுறைஎன்பது  கொடுக்கப்பட்டிருந்தது. அவற்றை ஈடு செய்யக்கூடிய வகையில் இந்த வேலைநாள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சனிக்கிழமை கூட வேலை நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் நாளை தினம் சனிக்கிழமையும் சென்னையில் இருக்கக்கூடிய அனைத்து வகை பள்ளிகளும் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்..