பிரபல மூத்த நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில் நேற்று சரத்பாபுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 1973-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ராமராஜ்யம் என்ற திரைப்படத்தின் மூலம் சரத்பாபு நடிகராக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் ஏற்பட்ட படங்களில் நடித்துள்ள சரத் பாபுவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இவரின் மொத்த சொத்து மதிப்பு 2 கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.