தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி‌ இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. தற்போது விடாமுயற்சி படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக புது தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னதாக நடிகை திரிஷா அஜித்துக்கு ஜோடியாக ஜி, கிரீடம், மங்காத்தா மற்றும் என்னை அறிந்தால் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 5-வது முறையாக விடாமுயற்சி படத்தின் மூலம் மீண்டும் அஜித்துடன் திரிஷா நடிக்க இருக்கிறார். மேலும் 7 வருடங்களுக்கு திரிஷா மற்றும் அஜித் மீண்டும் இணைய இருப்பதாக வந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.