தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அப்பாஸ். இதுவரை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அப்பாஸ் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் குடும்பத்துடன் வெளிநாட்டில் சென்று செட்டிலானார். நடிகர் அப்பாஸ் தற்போது நியூசிலாந்தில் பைக் மெக்கானிக்காக இருக்கிறார்.

தன்னுடைய கடந்த காலத்தை நினைக்கும் போது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கூட வந்ததாக நடிகர் அப்பாஸ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் அப்பாஸின் மனைவி சிறந்த ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். மேலும் ஒரு முன்னணி நடிகராக இருந்த  அப்பாஸ் தற்போது நியூசிலாந்தில் ஒரு பைக் மெக்கானிக்காக வேலை பார்த்துக்கொண்டு சாதாரண மனிதராக வாழ்ந்து வருவது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.