பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் இலியானா. இவர் தமிழில் கேடி மற்றும் நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் நடித்து வரும் நடிகை இலியானா அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். ஆனால் தன்னுடைய காதலர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

நடிகை இலியானா பிரபல நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் செபாஸ்டியனை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக தன் காதல்ருடன் மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படத்தை தற்போது இலியானா வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படத்தில் இருவரின் கைகள் மட்டுமே தெரிகிறது. காதலரின் முழு உருவமும் தெரியவில்லை. மேலும் இந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.