தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சங்கீதாவை காதலித்து கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், சஞ்சய் என்ற ஒரு மகனும் திவ்யா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜயை அவருடைய மனைவி சங்கீதா கடுமையாக திட்டிய ஒரு விஷயம் தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது நடிகர் சாந்தனு மற்றும் கீர்த்தி திருமணத்தின் போது நடிகர் விஜய் தான் தாலி எடுத்துக் கொடுத்தார். இந்த விஷயத்தை வீட்டிற்கு வந்த பிறகு மனைவி சங்கீதாவிடம் விஜய் கூறியுள்ளார். இதைக்கேட்டவுடன் சங்கீதா பெரியவர்கள் தான் தாலி எடுத்துக் கொடுக்க வேண்டும். நீங்கள் ஏன் எடுத்துக் கொடுத்தீர்கள் என்று கடுமையாக திட்டியுள்ளார். மேலும் இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் நடிகர் சாந்தனு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.