கன்னட நடிகர் நிதின் கோபி (39) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னட திரையுலகின் மூத்த நடிகர் டாக்டர் விஷ்ணுவர்தனின் மகனாக ‘ஹலோ டாடி’ படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் நிதின் கோபி பெரிய அளவில் கவனம் பெற்றார். இந்நிலையில், நிதின் கோபி திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இறப்புக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், முத்தினந்த ஹெந்தி, கேரளிடா கேசரி, நிஷப்தா, சிரபந்தவ்யா உள்ளிட்ட பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளார்.