தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் எஸ் ஜே சூர்யா தற்போது ராதா மோகன் இயக்கத்தின் உருவான பொம்மை என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் நிலையில் கடந்த வருடம் பொம்மை படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை பெற்றது.

இந்நிலையில் தற்போது பொம்மை படத்தின் இரண்டாம் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். மேலும் பொம்மை திரைப்படம் ஜூன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது.