தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சினிமாவை தாண்டி பல தொழில்கள் செய்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் நடிகர் விஜயின் தாயார் சோபா, அவருடைய மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் ஆகியோரின் பெயரில் சில திருமண மண்டபங்களை விஜய் நிர்வகித்து வருகிறார்.

இந்த திருமண மண்டபங்களை மாத வாடகை 8 லட்சத்திற்கு 15 வருட ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் மனைவி சங்கீதா பெயரில் உள்ள திருமண மண்டபத்தை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு தற்போது மாத வாடகை 12 லட்சத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடிகர் விஜய் விட்டுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.