தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் 2 பட குழுவினர் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்ற நடிகர் விக்ரமின் முடியை பிடித்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இழுக்கிறார். உடனே சோபிதா துலிபாலா நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை செல்லமாக அடிக்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.