தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சுருதிஹாசன். இவர் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து நடித்த 3 திரைப்படம் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். 3 படம் ரிலீசான நாளிலிருந்து தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனை சேர்த்து வைத்து கிசுகிசுக்கள் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் பிரிந்ததற்கு காரணம் ஸ்ருதிஹாசன் தான் என இணையத்தில் தகவல்கள் தீயாக பரவியது.
இந்நிலையில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் பற்றி பரவும் வதந்திகளுக்கு தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தனுஷ் எனக்கு நல்ல நண்பர். 3 படத்தில் நான் நன்றாக நடிப்பேனா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்து நிலையில் நடிகர் தனுஷ் என் மீது நம்பிக்கை வைத்தார். இது போன்ற வதந்திகளுக்கு நான் மக்களை குறை சொல்ல விரும்பவில்லை. மேலும் அதற்காக என் மீது சிப் பொருத்திக்கொண்டு போகும் இடமெல்லாம் பாருங்கள் என நிரூபித்து காட்ட வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.