தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களாக விளங்குபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக போட்டி இருந்தாலும் நல்ல நண்பர்கள் என்ற பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் நடிகர் அஜித் விஜயை எப்படி அழைப்பார் என்பது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதாவது மங்காத்தா படத்தில் வரும் ஒரு காட்சியில் திரையரங்கில் ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். இதற்கு எந்த நடிகரின் பாடலை போடலாம் என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது நடிகர் அஜித் தம்பி விஜயின் பாடலை போடலாம் எனக் கூறியுள்ளார். மேலும் இந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு சொன்ன பிறகு அஜித் மற்றும் விஜய் இருவரும் சகோதரர்கள் போல் பழகி வருவது தெரிய வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.