தென்னிந்திய சினிமா படங்கள் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றாலும் பெரும்பாலும் தென்னிந்திய படங்களை பாலிவுட் என்று அழைக்கிறார்கள். சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தையும் ஆஸ்கார் விழாவின் தொகுப்பாளர் பாலிவுட் படம் என்று மேடையில் அழைத்தது பெரும் சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் சென்னையில் நடைபெற்ற சினிமா கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அவரிடம் தென்னிந்திய படங்கள் பெரும்பாலும் பாலிவுட் படங்களாகவே வெளியில் முன்வைக்கப்படுகிறது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு இயக்குனர் மணிரத்தினம் இந்தித்திரை உலகம் முதலில் தங்களை பாலிவுட் என்று அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார். அவர்கள் அப்படி செய்தால் இந்திய சினிமாவை பாலிவுட் என்று அழைப்பதை மக்களும் நிறுத்திக் கொள்வார்கள் என்று கூறினார். மேலும் இதே கருத்தரங்கில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் எனக்கு பாலிவுட் மற்றும் கோலிவுட் போன்ற வுட்டுகளில் நம்பிக்கை இல்லை. என்னைப் பொறுத்தவரை அனைத்தும் இந்திய சினிமா தான் என்று கூறினார்.