தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சிம்பு ஒபலி கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை சாய்ஷா ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். இப்படம் கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து மார்ச் 31-ஆம் தேதி வெற்றிமாறனின் விடுதலை திரைப்படமும் ரிலீஸ் ஆனதால் பத்து தல படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவியது.

இதனால் பத்துதல திரைப்படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் பத்து தல திரைப்படம் லாபமா நஷ்டமா என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது பத்து தல திரைப்படம் ரிலீசுக்கு முன்பாகவே ஒரு தொகைக்கு விற்பனையாகியுள்ளது. அதன் பிறகு படம் ரிலீஸ் ஆன பிறகும் ஓரளவு லாபத்தை பெற்றுக் கொடுத்ததாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் தற்போது பத்து தல திரைப்படம் லாபம் தான் என்பது உறுதியாகியுள்ளது.