தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சேத்தன் நடித்துள்ளார். விடுதலை திரைப்படம் பலரது பாராட்டுகளையும் பெற்று வரும் நிலையில் நடிகர் சேத்தன் சமீபத்திய பேட்டியில் தான் நடித்த போலீஸ் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார். விடுதலைப் படத்தை யார் பார்த்தாலும் நடிகர் சேத்தன் மீது கோபம் வரும் அளவுக்கு நடிப்பில் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் தன்னை பலரும் திட்டி மெசேஜ் அனுப்புவதோடு பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக இதுபோன்ற சீப்பான கதாபாத்திரங்களில் நடிக்காதீர்கள் என்று கூறியதாக சேத்தன் கூறியுள்ளார். ஆனால் இந்த விமர்சனத்தை நெகட்டிவ் விமர்சனம் என்று பார்க்காமல் தன்னுடைய நடிப்புக்கு கிடைத்த பாராட்டுக்கள் என்று தான் பார்ப்பதாகவும் சேத்தன் கூறியுள்ளார். மேலும் நீண்ட நாட்களாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய கனவு தற்போது நிறைவேறியுள்ளதாகவும் நடிகர் சேத்தன் தெரிவித்துள்ளார்.