தமிழ் சினிமாவில் கனா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தர்ஷன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இன்னிலையில் நடிகர் தர்ஷனும் மலையாள நடிகை அஞ்சுக்குரியனும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இது ஒரு நகைக்கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமாகும். மேலும் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.