காதலித்த பெண்ணைக் கைபிடிப்பதற்காக வாலிபர் ஒருவர் 8 வருடங்களாகப் போராடி, உழைத்து, தன் காதலை வென்றுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஒரு பெண்ணை உருகி உருகி காதலித்து வந்த அந்த வாலிபர், அவளையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அவர் மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்ததால், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்திற்குப் பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “ஏழைக்கு என் மகளைத் தர மாட்டேன்” என உறுதியாக மறுத்துவிட்டனர்.

​இதனால் சோர்ந்து போகாத அந்த வாலிபர், தன் காதலை நிரூபிக்கவும், காதலியின் கரம் பிடிக்கவும் வெறியோடு உழைக்கத் தொடங்கினார். இரவென்றும் பகலென்றும் பாராமல் ஒரு டெலிவரி பாயாக (Delivery Boy) கடுமையாக உழைத்து பணம் சேர்த்தார். சிறுகச் சிறுகச் சேர்த்த அந்தப் பணத்தைக் கொண்டு, தனக்கென ஒரு சொந்த வீட்டையும் கட்டிக் காட்டினார்.

இவருடைய இந்த அசாத்திய உழைப்பையும், மாறாத காதலையும் பார்த்து நெகிழ்ந்த பெண்ணின் வீட்டார், இறுதியாகத் தங்களின் திருமணச் சம்மதத்தைத் தெரிவித்துள்ளனர். தற்போது தன் நீண்ட நாள் காதலியைத் கரம் பிடிக்கும் மகிழ்ச்சியில், அந்த வாலிபர் திருமண மேடையில் ஆனந்தக் கண்ணீருடன் நடனமாடிக் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.