சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளது. அதில், ஒரு நபர் ஸ்டீயரிங் வீல் (Steering Wheel) இல்லாத காரை, வெறும் கட்டிங் பிளேயரை (Pliers) மட்டுமே கொண்டு இயக்கும் ஆபத்தான காட்சி பதிவாகியுள்ளது. காரின் ஸ்டீயரிங் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் கம்பி மட்டுமே இருக்க, அதில் கட்டிங் பிளேயரை மாட்டி, அதை இடமும் வலமும் திருப்பி அந்த நபர் காரை ஓட்டிச் செல்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், இது என்னடா புதுவிதமான கண்டுபிடிப்பு என்று வாயடைத்துப் போயுள்ளனர்.
இருப்பினும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, இதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஒருவேளை இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இது போன்ற ஆபத்தான முறையில் காரை ஓட்டுவது ஓட்டுநருக்கு மட்டுமின்றி, காரில் பயணிப்பவர்களுக்கும், சாலையில் செல்லும் மற்ற பொதுமக்களுக்கும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் கிரியேட்டிவிட்டி, பொறுப்புணர்ச்சி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த காரசாரமான விவாதத்தை கிளப்பியுள்ளது.
