உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில், தன் கூடவே வாழ்ந்து வந்த லிவ்-இன் பார்ட்னரைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹேமல் ககாரியா என்ற நபர், மூன்று குழந்தைகளுக்கு தாயான ரேஷ்மா கான் (என்கிற சனா) என்ற திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், ரேஷ்மா வேறு சில ஆண்களுடன் போனில் சாட் செய்வதை ஹேமல் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடந்த ஜூலை 4-ஆம் தேதி கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் சமாதானமாகியுள்ளனர்.
ஆனால், ரேஷ்மா நள்ளிரவில் அசந்து தூங்கிய சமயம் பார்த்து, ஹேமல் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். அதுமட்டுமின்றி, சடலத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு துண்டு துண்டாக வெட்டி, பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்து வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளார். கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்களை டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் போலீசார் ஆய்வு செய்தபோதுதான் அது ரேஷ்மா என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசாருடன் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சூடு மோதலுக்குப் பிறகு ஹேமல் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், குஜராத்தில் நடந்த ஒரு இரட்டைக்கொலை வழக்கிலும் இவன் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது அம்பலமாகியுள்ளது.
