சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை பொதுவாக பலருக்கும் இருக்கும். இதற்காக பலரும் தங்கள் வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வருவார்கள். அதற்காக தங்களுடைய கடின உழைப்பையும் கொடுப்பார்கள். அந்த வகையில் மருத்துவ படிப்பு படித்துவிட்டு சினிமாவில் நடிக்க வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதாவது  டாக்டருக்கு படித்துவிட்டு சினிமாவில் நடிக்க வந்த பிரபலங்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக பிரபல நடிகையான சாய்பல்லவி மருத்துவ படிப்பு படித்தவர்.

 

ஆனால் தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். அதேபோன்று பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதியும் டாக்டருக்கு படித்துவிட்டு சினிமா மீதான ஆர்வத்தினால் டாக்டர் வேலையில் பார்க்காமல் சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகையான ஸ்ரீ லீலாவும் மருத்துவ படிப்பு படித்தவர்தான். மேலும் நடிகர்களான அஜ்மல் அமீர், பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் மறைந்த நடிகர் சேதுராமன் ஆகியோரும் மருத்துவ படிப்பு படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.