பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரின் தர்ன் தரன் சாலையில் வேலை விஷயமாக வீட்டிலிருந்து வெளியே வந்த இளம்பெண் ஒருவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் செல்போனைப் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண் செல்போனைப் பறி கொடுக்காமல் தற்காத்துக் கொள்ள முயன்றபோது, ஆத்திரமடைந்த அந்த நபர் அப்பெண்ணைக் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்டு செல்போனுடன் தப்பியோடியுள்ளார்.

காயமடைந்த நிலையிலும் துணிச்சலுடன் அந்த நபர் சென்ற வாகனத்தைப் பிடித்துத் தடுக்க முயன்ற அந்த இளம்பெண், நிலைதடுமாறி சாலையில் விழுந்ததில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்தச் சம்பவம் முழுவதுமே அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தப்பியோடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பகல் நேரத்திலேயே அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.