பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் திலிப் யாதவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மது போதையில் ஒரு பாம்பை எடுத்து கொஞ்சி விளையாடியுள்ளார். அவர் அந்த பாம்புக்கு பலமுறை முத்தம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் பாம்பை கீழே விட்டு விடும்படி கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அதையெல்லாம் திலீப் காதில் வாங்கிக் கொள்ளாமல், ஒரு கட்டத்தில் பாம்பை திட்டத் தொடங்கியுள்ளார். அதன் பிறகு ஒரு கோவிலுக்கு சென்று கடவுள் முன்பாக பாம்பை வைத்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் பாம்பை கழுத்தில் போட்டு  நடனமாடியுள்ளார். அதன்பிறகு பாம்பை அவர் கீழே விட பயந்து போன பாம்பு அங்கிருந்து ஓடி விட்டது. இந்நிலையில் பாம்பை கீழே விட்டவுடன் திலீப் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியான நிலையில் திலீப்பை பாம்பு கடித்தது தெரிய வந்தது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.