இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஜிம்மில் வாலிபர் ஒருவர் எடை தூக்கும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அவருடன் மற்றவர்களும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.
New Fear Unlocked 🔓
pic.twitter.com/mCtjjqszJG— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 4, 2025
இந்நிலையில் அந்த வாலிபர் எடை தூக்கும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென அவரது வலது காலின் கீழே உள்ள டைல்ஸ் வெடித்து சிதறியது. இதனால் சமநிலையை இழந்த அவர் எடை தூக்கும் இயந்திரத்தை கீழே தவறவிட்டார். இதில் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ அந்த ஜிம்மில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
