மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை காலை அதிரடியான ஒரு விபத்து தடுக்கப்பட்டது. காலை 6:41 மணிக்கு லோக்மான்ய திலக் டெர்மினஸ் – சாவந்த்வாடி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் நம்பர் ஒன்று பிளாட்பாரத்துக்கு வந்தது. அப்போது இளைஞர் ஒருவர் ரயிலில் இருந்து இறங்க முயன்றார்.
रत्नागिरी: चालत्या गाडीतून उतरणे एका तरुणाच्या चांगलेच अंगाशी आले. उतरताना घसरून पडल्याने तो रेल्वेखाली जाणार होता. मात्र त्याचे नशीब बलवत्तर असल्याने त्याचा जीव वाचला. कोकण रेल्वेच्या रत्नागिरी स्थानकात शनिवारी (30 ऑगस्ट) मोठी दुर्दैवी घटना सुदैवाने टळली.#Railway #maharashtra… pic.twitter.com/tOmsxnjMIM
— Lokmat (@lokmat) August 30, 2025
ஆனால், ரயில் நிற்பதற்கு முன்பாக தாண்டி கீழிறங்க முயற்சித்ததால் அவர் தடுமாறி தவறி விழுந்தார். நகர்ந்துக் கொண்டிருந்த ரயிலின் மிக அருகில் அவர் விழுந்த நிலையில், சில விநாடிகளில் பெரும் உயிரிழப்பு நேர்ந்திருக்க வாய்ப்பு இருந்தது.
இந்த சூழ்நிலையில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ரஞ்சித் சிங் மற்றும் மகேந்திர பால் ஆகிய இருவரும் அதிரடியாக பதிலளித்தனர். அதேசமயம் பிளாட்பாரத்தில் இருந்த விற்பனையாளர் வீர சிங் உதவியுடன் அந்த இளைஞரை தன்வசம் இழுத்து பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த பயங்கரமான காட்சி தற்போது சிசிடிவி காட்சிகளாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த இளைஞர் ரத்னகிரி அருகே உள்ள கோலாப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. முதற்கட்ட சிகிச்சையை கோங்கண் ரயில்வே மருத்துவக் குழுவினர் வழங்கி, பின்னர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த வீரர்களின் செயலை பாராட்டிய கோங்கண் ரயில்வே தலைவர் சந்தோஷ்குமார் ஜா, இரு ரயில்வே காவலர்களுக்கும், விற்பனையாளருக்கும் தலா ரூ.5,000 ஊக்கத் தொகையாக வழங்கினார். அதற்கான பரிசையும் உடனடியாக வழங்கினார். இந்த நிகழ்வின் மூலம் ரயில்வே பயணிகளின் பாதுகாப்பில் காவலாளிகள் மற்றும் பொதுமக்களின் துரித நடவடிக்கைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டது.
