இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஹோட்டலுக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் உணவு பரிமாறும் பெண்ணிடம் உணவை கேட்கிறார். அதை கொண்டு வந்த அந்த பெண், வாலிபரின் முன்பு வைக்கிறார். இதையடுத்து அந்த வாலிபர் திடீரென கோபமடைந்து பெண்ணை திட்டி விட்டு அதற்கான பணத்தை கையில் கொடுக்காமல் தூக்கி வீசுகிறார்.

 

இதைத்தொடர்ந்து அந்த பெண் கீழே கிடக்கும் பணத்தை எடுக்க முயற்சி செய்கிறார். அப்போது அங்கு வந்த ஹோட்டலின் மேலாளர் அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தி வாடிக்கையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதன்பின் அப்பெண்ணிடம் கூறி அந்த உணவை எடுத்து செல்லுமாறு கூறுகிறார். இதையடுத்து மேலாளர் வாடிக்கையாளரிடம் கீழே கிடக்கும் பணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறுகிறார். அதன் பின் அந்த வாலிபர் அந்த பணத்தை எடுத்து செல்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.